பூகம்ப பகுதியில் ஜாதி: லண்டன் அமைப்பு கண்டனம்
லண்டன்:
குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி அடிப்படையில்நிவாரணப்பொருட்களை வழங்கப்பட்டதைத் தடுக்காமல் இருந்த இந்திய அரசு அலுவலகங்களை லண்டனில்செயல்படும் அம்பேத்கார் ஆதரவாளர்கள் கடுமையாகக் விமர்சித்துள்ளனர்.
லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் கடந்த சனிக்கிழமை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்காரின் 110வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசியவர்கள், லண்டன் பத்திரிக்கைகளில் வெளியான செய்தியைஆதாரமாகக் கொண்டு பேசினார்கள். குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்குநிவாரணப் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை.
அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாதி வாரியாகத் தரம்பிரித்து இந்திய அரசு நிவாரணப் பொருட்களைவழங்கியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளன லண்டன் பத்திரிக்கைகள்.
அம்பேத்கார் மற்றும் புத்த அமைப்புக்களின் செய்தித் தொடர்பாளர் சானன் சாஹல் கூறுகையில், குஜராத்தில்பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாகப் போய்ச் சேரவில்லை.
தலித், தாழ்த்தப்பட்டவர்கள், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்குநிவாரணப்பொருட்கள் வழங்கப்படவில்லை. குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள்அனைத்து விதமான நிவாரண உதவிகளையும் செய்தன.
ஆனால் அது முறையாக தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. ஜாதி வாரியாகத் தரம் பிரித்துபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.
அதாவது நிவாரண உதவி தேவைப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. உயர்ஜாதிமக்களுக்கு மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
லண்டனில் வாழும் இந்தியர்கள் அனைவரும் தாங்கள் இந்தியர்கள் என்று மிகவும் பெருமையுடன் வாழ்கிறார்கள்.ஆனால் இந்தியாவிலேயே இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
இங்குள்ள எதிர்க்கட்சிகள் கூட, தேவைப்படுபவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் ஜாதிஅடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்குவது ஏன் என்று கேட்கிறார்கள். குஜராத் மக்களிடமிருந்து எங்கள்அலுவலகத்துக்குக் கடிதங்கள் வருகின்றன. அதில் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்காதது குறித்துஎழுதியுள்ளார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications