சுகுமாறன் நம்பியார் நேர்மையாக செயல்படுவார்: நம்பியார்
ஊட்டி:
சுகுமாறன் நம்பியார் நேர்மையாகச் செயல்பட்டு தொகுதி மக்களுக்காக உழைப்பார் என்று பழம்பெரும் வில்லன்நடிகர் நம்பியார் தெரிவித்தார்.
ஊட்டியில் நம்பியார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் பழைய காங்கிரஸ் அனுதாபி. நான் சொல்வது இந்திரா காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை.கடந்த 46-47ம் ஆண்டு நானும் எனது மனைவியும் நூல் நூற்று கதராடை அணிந்து வந்தோம்.
தற்போது எனது மகன் அவரது விருப்பப்படியே காங்கிரசில் இருக்கிறார். திருச்சி பாராளுமன்றத் தொகுதியில்அவருக்கு பாரதிய ஜனதாக் கட்சி இட ஒதுக்கீடு செய்துள்ளது. இது பற்றி எனக்கு எவ்வித யோசனையும் இல்லை.
அவரை பா.ஜ மேலிடத்திற்குப் பிடித்துள்ளது. சுகுமாறன் நம்பியார் நேர்மையாக செயல்பட்டு தொகுதிமக்களுக்காக உழைப்பார் என்பது எனக்குத் தெரியும். எம். பி. தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும் என்பதுஎல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்குத் தேர்தலில் செலவிடும் அளிவிற்கு எங்களிடம் பணம் இல்லை. எனக்குவசதி இல்லை.
அதே போல, காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வசதியைப் போல பாரதிய ஜனதாக் கட்சிக்கும் செலவிடும் அளவிற்குப்பணம் இல்லை. என்னுடைய பெயரில் நம்பியார் உள்ளது. எனது மகனுடைய பெயரிலும் நம்பியார் உள்ளது.நம்பிக்கை உள்ளவர்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ய முடியாது எனச் சொல்ல முடியுமா? தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்என்பார்கள். கடைசிநேரத்தில் எழுச்சி ஏற்படும். எனக்கு அதிகமாக பேடைப் பேச்சு வராது. பல மணிநேரம்பேசினாலும், அது கோர்வையாக இருக்காது.
முதல்வர் கருணாநிதி எனக்கு நெருங்கிய நண்பர். சேலத்தில் மந்திரிகுமாரி படம் எடுக்கும்போதுநெருங்கியிருந்தோம். சினிமாக்காரர்கள் அரசியலில் ஈடுபடுவது அவர்களது சொந்தவிருப்பம். அமெரிக்காவில்இருக்கும் இரண்டு கட்சிகள் போல இந்தியாவில் இரண்டு அல்லது 3 கட்சிகளுக்கும் மேல் இருக்கக்கூடாது.
அப்போதுதான் இந்த நாடு உருப்படும். ஏற்கனவே இந்த முறைகள் இருந்திருந்தால், இந்தியா முதல் வல்லரசுநாடாகத் திகழும். ஏராளமான அரசியல் கட்சிகள் இருப்பதால் தான் நாட்டின் வளர்ச்சிபாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது.
அரசியல் சிலருக்கு நஷ்டம் இல்லாத வியாபாரம். 5 ஆண்டுகள் பதவியிலிருந்தால், 25 ஆண்டுகளுக்குக்கவலையே கிடையாது. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியைப் போல ஒன்று இரண்டு கட்சிகள் இருந்தால்,தேசத்திற்கு நல்லது என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications