ஒருவழியாய் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி:
நாடாளுமன்ற கூட்டம் 3 வார இடைவெளிக்குப் பின் திங்கள்கிழமை கூடுகிறது. ஆயுத பேர ஊழல் விவாகரம்காரணமாக மீண்டும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடும் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டவது கட்ட கூட்டம் திங்கள்கிழமை தொடங்குகிறது.
தெஹல்கா டாட்காம் இன்டர் நெட்தளம் வெளியிட்ட ஆயுதபேர ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய்அரசு பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்நடத்தின.இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.
எதிர்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10 நாட்கள் தொடர்ந்துபாதிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தை நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகி 3 வார காலம் ஒத்திவைத்தார்.
3 வார இடைவெளிக்குப்பின் நாடாளுமன்றம் மீண்டும் திங்கள் கிழமை கூடுகிறது. இப்போது மீண்டும் ஆயுத பேரஊழல் விவகாரம் காரணமாக எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனதாகட்சி தலைவர் சுப்ரமணியம்சுவாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது சி.பி.ஐ.விசாரணை நடத்தவேண்டும் என கூறி மத்திய அரசிடம் பல ஆவணங்களை கொடுத்து வற்புறுத்தியுள்ளார். இந்த பிரச்சனையும்நாடாளுமன்றத்தில் எழுப்பப்படலாம் என தெரிய வருகிறது.
திங்கள்கிழமை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியவுடன் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மறைவு அஞ்சலிசெலுத்தப்பட்டதும் சபை ஒத்தி வைக்கப்படும்.
நாடாளுமன்றம் அடுத்தமாதம் 11ம் தேதி வரை நடைபெறும். பிரதமர் தனது ஈரான் சுற்றுப்பயணம் குறித்துஅறிக்கை தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும் இந்த கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா உட்பட 36மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications