திராவிட கட்சிகளின் இரட்டை வேடம்
சென்னை:
இந்த மாதம் 14ம் தேதி பிறந்த தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் புதிய அரசியல்கலாச்சாரத்தின் பிறப்புக்கும் திராவிட அரசியல் கொள்கைகளின் முடிவுக்கும் ஒருஆரம்பம் என்றால் அது மிகையாகது
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகமும் (தி.மு.க.) அகிலஇந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் (அ.இ.அ.தி.மு.க) வரவிருக்கும்தமிழக சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்பட்டியலை தமிழ் புத்தாண்டு தினமான சனிக்கிழமை வெளியிட்டன.
பகுத்தறிவு வாதம் பேசும், தி.மு.கவும் அதிலிருந்து பிரிந்து உருவான அ.தி.மு.கவும்வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன் நடத்திய பூஜைகள் இந்த இரு கட்சிகளுமேதிராவிட கொள்கையிலிருந்து மாறி விட்டன என்ற தோற்றத்தைதான் ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தேர்தலையொட்டி மிகப் பெரிய யாகமேநடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மஞ்சள் துண்டில் ஆரம்பித்த கருணாநிதி இப்போது பெரியார் எதிர்த்த ஜாதியைஊக்குவிக்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட ஜாதிக் கட்சிகளை தனது கூட்டணியில்சேர்த்துக் கொண்டுள்ளார். இது திமுகவில் பெரியார் கொள்கைகளுக்கு பெரியஅளவில் இடம் கிடையாது என்பதையே காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள்கருதுகின்றனர்.
ஜாதியை அடிப்படையாக கொண்ட அரசியல் நுழைந்துவிட்டது தி.மு.க. திராவிடகொள்கைகளும், திராவிடர் கழக நிறுவனர் பெரியாரால் கூறப்பட்ட பகுத்தறிவுவாதங்களும் வெளியேறி விட்டன.
தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாதியின் உறவினரும், மத்தியவர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சருமான முரசொலி மாறன் தீவிர அரசியலில்இருந்து விலகப்போவதாக சனிக்கிழமை அறிவித்தது தி.மு.கவின் இந்த மாற்றத்தைஅவர் எதிர்ப்பதையே காட்டுகிறது.
மாறன் தனது இந்த முடிவுக்கு குறிப்பாக எந்த விதமான காரணமும் கூறாததுதி.மு.கவின் தேர்தல் குழுவின் முடிவை எதிர்த்து அவர் எடுத்த முடிவுதான் என்றுஎண்ணமும் நிலவி வருகிறது.
தான் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை மாறன் அறிவித்தது, அவர்கருணாநிதியுடன் நடத்திய 1 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்தான்அறிவிக்கப்பட்டது. முதல்வரின் மகன் ஸ்டாலினின் தலையீடு அதிகமாக இருப்பதால்அது பிரிவை உண்டாக்கியிருக்கும் எனவும் கருதப்படுகிறது.
15 சிறிய ஜாதிக்கட்சிகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்இணைக்கப்பட்டதற்கு காரணம் ஸ்டாலின்தான் என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவிவருகிறது.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுஆகியோர் சென்று மாறனை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் எது எந்தவிதமான பலனையும் அளிக்கவில்லை.
சமீப காலத்தில் தி.மு.க.தலைமையிலான கூட்டணியிலிருந்து பல கட்சிகள் வெளியேறிவிட்டன.
ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, வாழப்பாடி தலைமையிலானதமிழக ராஜீவ் காங்கிரஸ், வைகோ தலைமையிலான ம.தி.மு.க. ஆகிய கட்சிகள்விலகின. அமைச்சர் தமிழ்க்குடிமகனும் தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு..கவில்இணைந்துள்ளார்.
சனிக்கிழமை கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அனைத்துஅமைச்சர்களுக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை அதிகாரியை தாக்கியதாக குற்றம்சாட்டபட்ட அமைச்சர்முல்லைவேந்தனுக்கு மட்டும் சீட் கொடுக்கப்படவில்லை.
மேயர் ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்தும், முதல்வர்கருணாநிதி சென்னை சேப்பாக்கம் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகிறார்கள்.முதல்வரின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு இந்த முறையும் தி.மு.கவில் தொகுதிஎதுவும் ஒதுக்கப்படவில்லை.
கருணாநிதி, ஸ்டாலினை எதிர்த்து அ.தி.மு.க. இந்த இரு தொகுதிகளிலும்வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குஒதுக்கியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டிதொகுதியிலும், தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளிலிருந்தும்போட்டியிடுகிறார்.
பல ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, டான்சி நிலபேர ஊழல் வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் இவர் தேர்தலில் போட்டியிடமுடியுமா, முடியாதா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் சீட் கொடுக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. 141 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க.சார்பில் 23 பெண்வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனாலும் 167 தொகுதிகளில் போட்டியிடும்தி.மு.க.வின் சார்பில் 14 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications