காங். தலைமையில் பாண்டிச்சேரியில் 3 வது அணி
பாண்டிச்சேரி:
காங்கிரஸ் தலைமையில் புதுவையில் 3 வது அணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளிலும், பிற 6 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன.
ஆனால் இதே கூட்டணி பாண்டிச்சேரியில் ஏற்படுவதில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. காங்கிரசுக்கு 9 தொகுதிகள்கொடுக்கப்படும். அவர்கள் இழுத்தடிக்காமல் விரைவில் பதில் கூற வேண்டும் என்று ராமதாஸ் ஒரு அறிக்கைவிட்டார்.
இதையடுத்து காங்கிரசும் பதிலடி கொடுத்தது. இரண்டரை ஆண்டு கால ஆட்சிப் பகிர்வு முறைக்கு காங்கிரஸ் ஒருபோதும் சம்மதிக்காது என்று கூறியது.
இந்நிலையில் பத்து தொகுதிகளை காங்கிரஸ், தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தருவதாகக் கூறியஜெயலலிதா இறுதியில் அந்தத் தொகுதிகளையும் தானே எடுத்துக் கொண்டார்.
பாண்டிச்சேரியில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறி வேட்பாளர் பெயர்களையும் அறிவித்துவிட்டார்.
இதனால் அரண்டு போன காங்கிரஸ் கட்சி 3 அணி அமைப்பது தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இதுகுறித்து பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,
அதிமுகவுக்குச் சமமாக 19 தொகுதிகளில் காங்கிரசும், 6 தொகுதிகளில் தமாகாவும் மீதமுள்ள தொகுதிகளில்கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடும்.
இதுகுறித்து உடன்பாடு ஏற்பட்டதும், முதல்வர் சண்முகமும், நானும் செவ்வாய்க்கிழமை டெல்லி சென்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளோம். அதன் பிறகு ஏப்ரல் 18 ம் தேதி வேட்பாளர்பட்டியல் வெளிடுவோம்.
பாண்டிச்சேரியில் வரும் தேர்தலில் எங்கள் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார்நாராயணசாமி.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications