சிங்கப்பூரில் கால் பதிக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
டெல்லி:
இந்தியாவின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் ஆசிய-பசிபிக்பகுதிகளில் தனது சேவையை விரிவுபடுத்துவதற்காக அலுவலகம் ஒன்றை சிங்கப்பூரில் தொடங்கி உள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதிகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனாவின் வடபகுதி, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துஆகிய நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்துவதற்காக இந்த அலுவலகத்தை துவக்கியதாக சத்யம்கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நெட்வொர்க் துறையில் ஈடுபட்டு வரும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், தைவான் நாட்டின் தொலைதொடர்புத்துறை, ஹாங்காங் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மற்றும் டூ பாண்ட், அல்காடெல், சிட்டி பாங்க்போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தேவையான நெட்வொர்க் சேவையை அளித்துள்ளது.
5 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான சிங்கப்பூர்அலுவலகத்தில் தற்போது 200க்கும் அதிகமானவர்கள் பணிபுரிவதாக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் துணைத்தலைவர் வீரேந்தர் அகர்வால் சிங்கப்பூர் அலுவலக திறப்புவிழாவில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி வாரியத்தின் தலைவர் கோ கெங் வா இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் சிங்கப்பூருக்கான இந்திய ஹைகமிசனர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications