தேர்தலில் மோதும் உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் பல உறவினர்களும் ஒருவருடன் ஒருவர் மோதவிருக்கிறார்கள்.

முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின்அ.தி.மு,கவுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் காளிமுத்து ஈ.வி.கே.எஸ்இளங்கோவனை தாக்கி அறிக்கைவிட்டார்.

பின் இளங்கோவனின் தாயாரும், அ.தி.மு.க. மகளிர் அணித் தலைவருமான சுலோசனாசம்பதை மகனையே திட்டி அறிக்கைவிட வைத்தார் ஜெயலலிதா

இதற்கு பதிலளித்த இளங்கோவன் தாயையும், நாயையும் விட்டு திட்ட வைக்கிறார்கள் எனகூறினார்.

அப்போது தாயையும், மகனையும் மோதவிட்டார் ஜெயலலிதா.

இப்போது வரவிருக்கும் தேர்தலில் தந்தையையும், மகனையும் ஒரு தொகுதியிலும்பெரியப்பாவையும், தம்பி மகனையும் இன்னொரு தொகுதியிலும் மோத வைக்கிறார்ஜெயலலிதா.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கேட்டார் தாமரைக்கனி. ஆனால் அவருக்கு சீட்கொடுக்கவில்லை ஜெயலலிதா. இதனால் கோபமடைந்த தாமரைக்கனி அ.தி.மு.கவிலிருந்துவிலகினார்.

தாமரைக்கனி சுயேட்சையாக ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து போட்டியிடுகிறார். அவரைஎதிர்த்து அவரது மகனான இன்பத்தமிழனை அ.தி.மு.க.சார்பில் போட்டியிட வைத்துள்ளார்ஜெயலலிதா.

இந் நிலையில் தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஏப்ரல் 20 ம் தேதி தேர்தல்பிரசாரம் செய்ய வரும் ஜெயலலிதாவை எதிர்த்தும், எனது மகனை என்னிடம் திருப்பிஒப்படைக்க வேண்டும் எனக் கோரியும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாககூறியுள்ளார்.

ஜெயலலிதா வரும் போது நானும், எனது குடும்பத்தாரும் எனது மகன் இன்பத்தமிழனைஎங்களிடம் ஒப்படைக்கக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். இதற்குப்போலீசாரிடம் அனுமதி வாங்கி விட்டேன் என்று கூறியுள்ளார் தாமரைக்கனி.அவருக்குஉடனடியாக போராட்ட அனுமதி வழங்கியுள்ளது திமுக அரசு.

ஆனால் தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழனோ, அப்பா எனக்கு முக்கியமில்லை.ஜெயலலிதா தான் என் தத்து தாய் என்கிறார்.ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்கு நான்செல்லப்பிள்ளை. நான் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார்.

வீரபாண்டி தொகுதியில்:

இதே போல் வீரபாண்டி தொகுதியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து அவரதுஅண்ணன் மகன் எஸ்.கே.செல்வத்தை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா. இவர் முன்புவீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இப்போது அவர் மீண்டும் தன் சித்தப்பாவுடன் மோதுகிறார்.

நல்லவேளை தமிழ்க்குடிமகனுக்கு ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. அவருக்கு சீட்கொடுத்தால் அவரை எதிர்த்து அவரது மகனையே நிறுத்துவோம் என தி.மு.க.பயமுறுத்தியிருந்தது.

ஜெயலலிதா தமிழ்க்குடிமகனுக்தகு சீட் கொடுக்கததால் அந்த தந்தை-மகன் சண்டைதடுக்கப்பட்டுள்ளது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று கூறப்படுதுண்டு.இன்றைய அரசியல் நிலையைப் பார்த்தால் அப்பா என்னடா மகன் என்னடா அரசியல்என்ற உலகத்திலே என்று தான் பாடத் தோன்றுகிறது.

இது பற்றி அரசியல்வாதிகளிடம் கேட்டால் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனகூறிவிடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+