லண்டன் ஹோட்டல் வழக்கு: ஜூன் 12 ல் ஆஜராக ஜெ.க்கு சம்மன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கில் ஜூன் 12 ம் தேதி ஆஜராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,டி.டி.வி.தினகரன் எம்.பி. ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.பி.தினகரன் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குத்தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரும், தினகரனும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். தினகரன்உதவியுடன் துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு இந்திய பணத்தைஜெயலலிதா கொண்டு சென்றுள்ளார்.

இந்தப் பணத்தின் மூலம் இங்கிலாந்தில் வர்ஜின் தீவில் பதிவு செய்யப்பட்ட டிப்பர் இன்வெஸ்ட்மென்ட், டர்ன்கீஇன்டஸ்ட்ரீஸ், பன்யன் ட்ரீ என்டர்பிரைசஸ் ஆகிய 3 நிறுவனங்களை தினகரன் வாங்கியுள்ளார்.

மேலும் 39 கோடியே 56 லட்சத்து 78 ஆயிரத்து 465 ரூபாய் செலவில் இங்கிலாந்தில் ஜெயலலிதா பேரில் இரண்டுஹோட்டல்களை வாங்கியுள்ளார் தினகரன்.

கடந்த 98 ம் ஆண்டு இவ்விரு சொத்துக்களையும் சுமார் 121 கோடியே 53 லட்சம் ரூபாய் விற்றுள்ளனர்.

இதன்மூலம் ஜெயலலிதாவும், தினகரனும் வருமானத்துக்கு அதிகமாக 49 கோடிக்கு மேல் சொத்துக்களைசேர்த்துள்ளனர். இதற்கு ஜெயலலிதா எந்தக் கணக்கையும் வைத்துக் கொள்ளவில்லை.

ஜெயலலிதாவும், தினகரனும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளனர்.இவ்வாறு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா,தினகரன் ஆகியோர் ஜூன் 12 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்புமாறு முதன்மை செஷன்ஸ்நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+