தேர்தல்: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
சென்னை நகரில் தேர்தல் பாதுகாப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் காளிமுத்துதெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறை ஆணையர் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை நகரில் மொத்தம் 14 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதைத் தவிர புறநகர் பகுதிகளில் வில்லிவாக்கம், ஆலந்தூர்,தாம்பரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.
சென்னை நகர தொகுதிகளில் மொத்தம் 3633 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றைக் கண்காணிக்க 254ரோந்துக் காவல் படையினர் நியமிக்கப்பவுள்ளன.
சென்னை மாவட்ட தொகுதிகளில் 201 படையினரும், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னை மாவட்ட புறநகர்தொகுதிகளில் 53 படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.
ரோந்துப் படையினருடன் சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.
ஏப்ரல் 26-ம் தேதி முதல் துவங்கும் இவர்களது பணி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று பாதுகாப்புப் பணியை பார்வையிடுவது,சட்டம் ஒழுங்கைக் காப்பது ஆகியவை ஆகும்.
சென்னையில் தற்போது உள்ள 12,000 போலீஸாரில் 10,000 பேர் தேர்தல் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படவுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் கலவரம், வன்முறை போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் அந்தப் பகுதிகளுக்குகமாண்டோ அதிரடிப்படை அனுப்பி வைக்கப்படும். 200 கமாண்டோ வீரர்கள் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலின்போது அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைக்குரிய இடங்களில் கூடுதல் போலீஸார் இந்தத் தேர்தலின்போதுநிறுத்தப்படுவர்.
வாக்குப்பதிவு நாளன்று காலை முதல் மாலை வரை, ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸார் ஒவ்வொருதொகுதியிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications