காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
டெல்லி:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள்கொண்ட முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் கட்சிஅ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் த.மா.கா- காங்கிரஸ்ஆகிய இரண்டு கட்சிகளுக்குமாக சேர்த்து 47 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் த.மா.கா 32 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும்போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்ய தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் டெல்லி சென்றிருந்தார். அவர் மேலிடதலைவர்களுடன் ஆலோசனை செய்தார். பின்பு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 7வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. காட்டுமன்னார்கோவில்- ஆர். சச்சிதானந்தம்
2. நாமக்கல்- ரேணுகாதேவி
3. கோவைமேற்கு- எம், மகேஸ்வரி
4. ஊட்டி- எஸ்.எம்.ராஜு
5. கரூர்- டி.என். சிவசுப்பிரமணியன்
6. அறந்தாங்கி- ஏ.எம்.இப்ராஹிம் பாபு
7. சாத்தூர்- ஏ.ராஜேந்திரன்
டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
காங்கிரசின் வேட்பாளர் பட்டியலுக்கு முன்னாள் காங்கிரஸ் எம்.பி.அன்பரசு எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
திறமைக்கும், தகுதிக்கும் வாய்ப்பு கொடுக்காமல் ஜாதி அடிப்படையில் தொகுதிகள்ஒதுக்கபப்ட்டுள்ளது என அவர் குறை கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications