முன்னாள் அமைச்சரை சமாதனப்படுத்த ஜெ.தூது
ஈரோடு:
அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராமியை சமாதானப்படுத்த செங்கோட்டையனை ஜெயலலிதா தூதுஅனுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், வெள்ளகோயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்துரைராமசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் தொகுதிமுழுவதிலும் உள்ள அதிமுகவினரைத் திரட்டி போட்டி செயல்வீரர் கூட்டத்தைவெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
இதையடுத்து சீட் கிடைக்காத அதிருப்தியில் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதிருப்தி வேட்பாளராக அவர்செயல்படப் போவதாகவும் தெரிவித்தார்.
இதனை அறிந்த தலைமை, அதிருப்தியில் உள்ள துரை ராமசாமியை சமாதனப்படுத்தும்முயற்சியில்இறங்கியுள்ளது.
இதற்காக அவரது வீட்டிற்கு செங்கோட்டையனை ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார். செங்கோட்டையன்வியாழக்கிழமை துரைராமசாமியின் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து உடனுக்குடன் மதுரையில் தங்கியுள்ளஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications