மூப்பனார் மகனுக்கு டிக்கெட் கிடைக்குமா?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் மகன் கோவிந்தவாசனுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடடிக்கெட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்துமொத்தம் 47 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் போட்டியிடுகிறது.மீதமுள்ள இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமைதான் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. டெல்லியில்அக்கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் 7 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டார்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கனவே 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டது. வெள்ளிக்கிழமைஇக்கட்சியின் இரண்டாவது பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.
இரண்டாவது பட்டியலில் பல பிரபலங்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில்முக்கியமானவர் மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளில் சமீப காலமாக அதிக அளவில் கோவிந்தவாசன் ஈடுபாடுகாட்டி வருகிறார். ப.சிதம்பரம் கட்சியை விட்டு நீக்கப்படுவதற்குக் கூட கோவிந்தவாசன்தான் காரணம் என்றும்த.மா.கா. வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
கட்சிக்குள் தம்பி அய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் கோவிந்தவாசன் வரும் சட்டசபைத் தேர்தலில்போட்டியிடுவதன் மூலம், தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அவர் பாபநாசம் தொகுதியில் போட்டியிடலாம் என்றுகூறப்படுகிறது. அத்தொகுதியின் தற்போதைய வேட்பாளராக கருப்பண்ண உடையார் உள்ளார். அவருக்கு மீண்டும்சீட் கிடைப்பது சந்தேகம் என்று கூறுகிறார்கள். எனவே உடையாருக்குப் பதில் கோவிந்தவாசனுக்கு சீட் கிடைக்கும்என்றும் த.மா.கா தரப்பில் கூறப்படுகிறது.
ஒருவேளை கோவிந்தவாசன் போட்டியிடாவிட்டால், மூப்பனாரின் தம்பி ரங்கசாமி மூப்பனாரின் மகன் சுரேஷ்போட்டியிடலாம் என்று தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் மகன் அன்புமணி வரும் தேர்தலில் போட்டியிடுகிறார். முதல்வர்கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சென்னையில் போட்டியிடுகிறார். தாமரைக்கனி எம்.எல்.ஏ.வின் மகன்இன்பத்தமிழன் தந்தையை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அந்த வரிசையில் இப்போது கோவிந்தவாசன்சேரவுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications