சிறையில் மதானியை சந்தித்தனர் கேரள காங். தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை சிறையில் இருக்கும் மதானியை கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

கோவை சிறையில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானி உள்ளார். இவர் கோவைகுண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டதால் ஜாமீனில் வெளியே வர இயலாத நிலையில் உள்ளார்.

கேரள மக்கள் ஜனநிாயக் கட்சிக்கு திருவனந்தபுரம், கொல்லம், தெற்கு கேரளா ஆகிய மாவட்டங்களில் போதுமானஆதரவு உள்ளது. எனவே இவரைச் சந்தித்து ஆதரவு கேட்க கேரளா காங்கிரசில் கருணாகரன் அதிருப்திகோஷ்டியைச் சேர்ந்த சரத் சந்திரப் பிரசாத் ஜான் உள்பட 8 பேர் கோவை வந்திருந்தனர்.

இவர்கள் அப்துல்நாசர் மதானியைச் சந்தித்துப் பேச போலீசாரிடம் விண்ணப்பித்தனர். ஆனால் போலீசார் அனுமதிமறுத்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் கேரள காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே சிறையில் வாக்குவாதம்ஏற்பட்டது.

இதனை அறிந்த அப்துல்நாசர் மதானியும் வாக்குவாதம் செய்தார். பின்னர் ஒருவழியாக அவர்கள் மதானியைச்சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தை 20 நிமிடம் நீடித்தது. இதையடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் காங்கிரஸ் ஆதரவுதெரிவித்து மதானி அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+