பாண்டி. பா.ம.க. நிர்வாகிகள் கூண்டோடு விலகல்
சென்னை:
பாண்டிச்சேரி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மஞ்ஜினி, துணைத் தலைவர் சங்கரன் ஆகியோர் கட்சித்தலைமையைக் கண்டித்து கட்சியிலிருந்து விலகி விட்டனர்.
சமீபத்தில்தான் மஞ்ஜினியும் பிறரும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர். பாட்டாளி மக்கள் கட்சியில்இணைந்த மஞ்ஜினிக்கு கட்சித் தலைவர் பதவியை கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
இந்த நிலையில், மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சிவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முதல் பட்டியலில் வெளியான 9 பேரில் மஞ்ஜினி மற்றும் அவரதுஆதரவாளர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. இதையடுத்து மஞ்ஜினி அதிருப்தியடைந்தார்.
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் கட்சியை விட்டு விலக முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து மஞ்ஜினி, துணைத் தலைவர் சங்கரன், பிற நிர்வாகிகளான நீதிபதி கோவிந்தராஜன் உள்பட பலநிர்வாகிகள் கட்சியை விட்டு கூண்டோடு விலகினர்.
தங்களது முடிவு குறித்து மஞ்ஜினி செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சித் தலைவர் ராமதாஸ் தன்னிச்சையாகசெயல்பட்டு வருகிறார். தனது உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் மட்டுமே தேர்தலில் டிக்கெட்கொடுத்துள்ளார்.
தான் மட்டுமே கட்சியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற போக்கில் செயல்பட்டு வரும் ராமதாஸைக் கண்டித்துகட்சியை விட்டு விலகி விட்டோம்.
தனிக்கட்சி துவக்குவதா அல்லது வேறு கூட்டணிக்கு ஆதரவு தருவதா என்பது குறித்து விரைவில் முடிவுசெய்யப்படும் என்றார் மஞ்ஜினி.
பாட்டாளி மக்கள் கட்சி பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக்கட்சியான அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாண்டிச்சேரி ஆட்சியை குறி வைத்து காய் நகர்த்திவரும் டாக்டர் ராமதாஸுக்கு, மஞ்ஜினி விலகல் பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பாண்டிச்சேரிவட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications