இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண நார்வே தூதுக்குழு முயற்சி செய்து வரும் வேளையில்,அமைதிப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதாவது, வடகிழக்குப் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று புலிகள் வைத்த கோரிக்கையை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நிராகரித்ததையடுத்துஅமைதிப்பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமுன், வடகிழக்குப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரதடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் விடுதலைப்புலிகள் மிகவும் பிடிவாதமாக உள்ளனர்.
புலிகள், இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நார்வே தூதுக்குழு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இப்பிரச்சனையில் நார்வே நாட்டினரின்ஆலோசனை, ஒத்துழைப்பு ஆகியவை தேவை என்றும் வற்புறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, பொருளாதாரத் தடையை விலக்க மாட்டோம் என்று அறிவித்துள்ள பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமநாயகே கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த புலிகள் விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாகஉள்ளது.
ஆனால் அதே நேரம் உண்மையிலேயே புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்தெரிவித்துள்ளார்களா என்பது குறித்து சந்தேகம் உள்ளது என்றார்.
இதற்கிடையே, ராணுவத்தை நோக்கி மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்த புலிகள் தயாராக இருப்பதாகவும்,அதற்காக அவர்கள் தங்களது நிலையை மிகவும் வலுப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள்கிடைத்துள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையே நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் அடுத்த வாரம் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைசந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்தனர். அது மூன்று முறைநீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள புலிகளின் சண்டை நிறுத்தம் வரும் 24 ம் தேதியுடன்முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications