வாக்குப் பதிவு எந்திரங்கள்: ஜெ. மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
புது தில்லி:
வரும் தேர்தலில் மின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் ஓட்டுப் போடத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரிஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் ஓட்டுப் போடத் தடைவிதிக்க வேண்டும் என்பதற்கு போதுமானகாரணங்களை ஜெயலலிதா தன் மனுவில் தெரிவிக்கவில்லை எனக் கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடிசெய்தனர்.
பி.என். கிர்பால் மற்றும் ரூமா பால் ஆகிய நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றமும் இம் மனுவை நிராகரித்ததை அடுத்து, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications