வாஜ்பாயுடன் வங்கதேச அதிபர் தொலைபேசியில் பேச்சு
டாக்கா:
வங்கதேச ரைபிள்ஸ் படையினரால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொடூர முறையில்கொல்லப்பட்டது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன் வங்கதேசப் பிரதமர் தொலைபேசியில் பேசினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தான் முழு விசாரணை நடத்தப்படும் எனவும், இதில் தொடர்புடையவர்கள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வாஜ்பாயிடம் உறுதியளித்தார்.
அதே போல அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அலியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்குடன் தொலைபேசியில் பேசினார். சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் 4,000 கி.மீ. நீளமுள்ள இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியை வேலியிட்டு அடைப்பதை வங்கதேசம் எதிர்க்கிறது.
இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் சையத் எம். அலி கூறுகையில், இருநாட்டுத் தரப்பிலும் கடந்த வாரம் 19 வீரர்கள்பலியானதால் ஏற்பட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது உண்மை தான்.
ஆனால், அதே நேரத்தில் வேலி அமைத்து நாடுகளைப் பிரிப்பது நட்புறவை மேம்படுத்த உதவாது. இரு நாடுகளுக்கிடையேநட்பை வளர்ப்பதற்கான பாலமாக மட்டுமே எல்லைக்கோடு இருக்க வேண்டும். 1974-ல் ஏற்பட்ட இந்திரா-முஜிப் ஒப்பந்தம்நிறைவேற்றப்பட்டால்தான் இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகள் மேலும் குறையும்,.
இதுகுறித்து இந்தியா மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைக்காக நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த சம்பவத்துக்காக வங்கதேச ரைபிள்ஸ் படையின் டைரக்டர் ஜெனரல் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்மன்னிப்புக் கோரியுள்ளதாகக் கூறப்படும் செய்தி தவறு என்றார்.












Click it and Unblock the Notifications