பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வைகோ பிரச்சாரம்
திருச்சி:
திருச்சியில் பா.ஜ.க. நாடாளுமன்ற வேட்பாளர் சுகுமாறன் நம்பியாரை ஆதரித்து திங்கள்கிழமை மதிமுக பொதுச் செயலாளர்வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது வைகோ பேசியதாவது:
மதிமுக மீது மக்களிடையே அனுதாபம் ஏற்பட்டுள்ளது. மாற்றமே வராதா என ஏக்கத்தில் உள்ள மக்கள் மதிமுகவை ஆதரிக்கத்தொடங்கியுள்ளனர். இரண்டு கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து சலித்துப் போன மக்கள் எங்களைஆதரிக்கும் நிலைஏற்பட்டுள்ளது.
வாஜ்பாய் கையைப் பலப்படுத்த அதிமுகவை ஆதரித்தோம். பா.ஜ.க. அரசு வலுவோடு நிலைக்க நாங்கள் வாஜ்பாய்க்குஉறுதுணையாக இருப்போம். தமிழகத்தில் பா.ஜ.க. எங்களை ஆதரிக்காத நிலையில் இந்த தொகுதியின் லோக்சபா தொகுதியில்போட்டியிடும் சுகுமாறன் நம்பியாரை ஆதரிக்கிறோம்.
நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்போம்.
மதிமுக எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் ஊழலில் ஈடுபட்டால், அது தொடர்பாக பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளாமலேஅவர்களது பதவி பறிக்கப்பட்டு முறையற்ற வழியில் சம்பாதித்த சொத்துக்களை ஒப்படைப்போம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications