For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்கள் தீர்ப்பு ஊழல் ஆட்சிக்கு தடைக்கல்லாக அமையட்டும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்கள் மே 10-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அளிக்கும் தீர்ப்பு, ஊழல் ஆட்சி என்ற அரக்கஆட்சி வந்து விடக் கூடாது என்பதற்கான தடைக்கல்லாக அமைய வேண்டும் என்று திமுக தலைவரும்,முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தனது தொகுதியில் கடந்தஇரண்டு நாட்களாக கருணாநிதி பிரசாரம் செய்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சேப்பாக்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.கருணாநிதியின் பிரசாரப் பேச்சில் சில துளிகள்:

திமுக கூட்டணியில் 15 கட்சிகள் அடங்கியுள்ளன. அந்தக் கூட்டணியின் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக,திமுக தொண்டனாக, உங்கள் வாழ்த்துக்களையும், ஆதரவையும், நல்லாசியையும் கோரி வந்திருக்கிறேன்.

சேப்பாக்கம் தொகுதியில் நான் வெற்றி பெற்று விட்டால் நான் முதல்வராகி விட முடியும் என்று அமைச்சர்ஆர்க்காடு வீராசாமி கூறினார். அது தவறு. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால்தான் நான் முதல்வராக முடியும்.

வாக்காளர்கள் முன் 2 கேள்விகள் உள்ளன. அவர்கள் வர வேண்டுமா அல்லது இவர்கள் வர வேண்டுமாஎன்பதே அது. அவர்கள் என்பது ஊழல் நிறைந்த, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, அராஜக ஆட்சி புரிந்தஅவர்கள். இவர்கள் என்பது, ஐந்து ஆண்டுகாலம் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருந்தவர்கள், மக்கள்நலத் திட்டங்களை செம்மையாக மேற்கொண்டவர்கள், உழவர் சந்தை, சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தைக் கொண்டு வந்த இவர்கள் என்ற திமுகவினர்.

இவர்களைத் தீர்மானிக்கும் நாள்தான் மே 10. அன்று நீங்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு ஊழல் ஆட்சியை வரவிடாமல் தடுப்பதற்கான தடைக்கல்லாக அமைய வேண்டும என்றார் கருணாநிதி.

தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று கருணாநிதி ஓட்டுசேகரித்தார். பல இடங்களில் அவருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. இறுதியாக ஆதித்தனார் சாலையில், தனதுபிரசாரத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X