குற்றவாளிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்: நீதிமன்றம்
சென்னை:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுக்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொதுநலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவை நீதிபதிகள் ஜெயின், சம்பத் ஆகியோர்திங்கள்கிழமை விசாரித்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்தால்அவர்களது மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பெற்றக் கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது. தேர்தல் ஆணைய விதிமுறைகளில் உயர்நீதிமன்றம் குறுக்கிடமுடியாது.
1977 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைய விதிமுறைகளையே தேர்தல் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதையே தேர்தல் அதிகாரிகள் பின்பற்றுவார்கள் என்று தங்களதுதீர்ப்பில் கூறினர்.
முன்னதாக, இந்த மனு நுகர்வோர் பராமரிப்புக் குழு நிறுவனத் தலைவரும், வழக்கறிஞருமான கே.எம்.விஜயன் சார்பில் பொதுநலன்கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications