சைதை கிட்டு இல்லாமல் ஒரு தேர்தல்
சென்னை:
சைதை கிட்டு இல்லாத நிலையில், ஒரு சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது திமுக.
சைதை கிட்டு. இந்தப் பெயர் திமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது பிற கட்சிகளிலும் பிரபலமான பெயர்.தேவகோட்டையைச் சேர்ந்த கிட்டு சென்னை சைதாப் பேட்டை தொகுதியின் நிரந்தர திமுக வேட்பாளர் ஆவார்.
கடந்த பல தேர்தல்களில் திமுக வேட்பாளராக கிட்டுவே நிறுத்தப்பட்டு வருகிறார். தேர்தலில் தோல்வியுற்றாலும்கூட அடுத்த தேர்தலிலும் அவருக்கே சைதை தொகுதி வழங்கப்படுவது வழக்கம். திமுக தலைவர் கருணாநிதியின்செல்லப் பிள்ளை என்று வர்ணிக்கப்படுபவர் கிட்டு.
சமீப காலமாக சைதை கிட்டு உடல் நலமில்லாமல் இருந்து வருகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த கிட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளராக கிட்டு பெயர் இடம் பெற்றது. அப்போது பேசியகருணாநிதி, உடல் நலம் தேறி கிட்டு மீண்டும் தீவிரஅரசியலில் ஈடுபடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கருணாநிதியின் முதல் பிரசாரம் சைதாப்பேட்டைதொகுதியில்தான் துவங்கியது. அப்போது நடந்த பிரசாரக்கூட்டத்தில் கிட்டுவும் கலந்து கொண்டார். மெலிந்த தேகத்துடன், முகம் வற்றிய நிலையில், ஆளே மாறி இருந்தார்கிட்டு.
இப்போது மீண்டும் உடல் நலம் குன்றி கிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரால் பிரசாரத்தில்கலந்து கொள்ள முடியாது என்பதால், தனக்குப் பதில் வேறு ஒருவரை சைதை தொகுதியில் போட்டியிடச்சொல்லுமாறு திமுக தலைமையை கேட்டுக் கொண்டுள்ளார் கிட்டு. எனவே தொழிற்சங்கப் பிரமுகர்வை.பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிட்டு தேர்தலில் போட்டியிடதாதால், இளைஞர் அணி திமுக சோர்வுடன் காணப்படுகிறது. குறிப்பாகசைதாப்பேட்டை பகுதி திமுகவினர் உற்சாகமின்றி காணப்படுகின்றனர். தங்களது தளபதி கிட்டு இல்லாத நிலையில்தேர்தலை சந்திக்க அவர்களுக்கு விருப்பமே இல்லை. இருப்பினும் வை. பெருமாளுக்கு ஆதரவாக தீவிரபிரசாரத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே சைதை கிட்டு பெயர் பொறித்த சுவர் விளம்பரங்கள் சைதைதொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் விளம்பரங்கள் பளிச்சிட்டன. தற்போது அவற்றை மாற்றும் பணியில்திமுகவினர் மும்முரமாகியுள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!