ஜெ. வேட்பு மனு ஏற்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்களை ஏற்க வேண்டும் என்று வாதாடுவதற்காகடெல்லியிலிருந்து 3 மூத்த வழக்கறிஞர்கள் சென்னை வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மனு ஏற்கப்படுமா இல்லையா என்பது செவ்வாய்க்கிழமை தெரிந்துவிடும்.

ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிலதா தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு மத்திய தேர்தல் கமிஷன் பிறப்பித்த ஒரு உத்தரவில், 2 ஆண்டுகளுக்கு மேல்சிறைத்தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா தேர்தலில்போட்டியிட முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந் நிலையில், ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனுக்கள் தாக்கல்செய்துள்ளார். அவரது மனுக்கள் 24-ம் தேதி (நாளை) பரிசீலனை செய்யப்படவுள்ளன.

வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு வரும்போது தங்களது தரப்பு வாதத்தை எடுத்துரைப்பதற்காக ஜெயலலிதா சார்பில்3 டெல்லி வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வக்கீல்கள் பாப்தே, எஸ்.எஸ்.ரே மற்றும் விஸ்வநாதன் ஆகிய இந்த 3 வக்கீல்களும், செவ்வாய்க்கிழமைஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரிக்குச் செல்கின்றனர்.

இவர்களுக்குத் துணையாக வக்கீல் ஜோதியும் செல்கிறார்.

இவர்களில் ரேயும், ஜோதியும் கிருஷ்ணகிரிக்கும், மற்ற இரு வக்கீல்களும் ஆண்டிப்பட்டிக்கும் செல்கின்றனர்.ஜெயலலிதாவின் மனுவை நிராகரிக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் இவர்கள்எடுத்துரைப்பார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+