வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Karunanidhi Files Nomination Papers
சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்யும்
கருணாநிதி
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்தது.

வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 16-ம் தேதி துவங்கியது.இத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள்போட்டியிடுகின்றன.

வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரதுமகன் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி, பலஅமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிந்தது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும்24-ம் தேதி (நாளை) பரிசீலனை செய்யப்படுகின்றன. 26-ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும்.

அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் தெரிய வரும். வாக்குப்பதிவு மே 10-ம் தேதி நடக்கிறது. 13-ம் தேதிவாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்தத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளில்போட்டியிடுகிறார். முதல்வர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் நிற்கிறார்.

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆரணி தொகுதியிலும், பா.ஜ.க. துணைத் தலைவர் லட்சுமணன்மயிலாப்பூர் தொகுதியிலும், இளைஞர் திமுக அணித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலும்,புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வால்பாறை மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளிலும், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மங்களூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

ஜெயலலிதாவின் மனுக்கள் நிராகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது செவ்வாய்க்கிழமை மாலை தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+