நான் மூப்பனாரை மதிக்கிறேன்: சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

மூப்பனார் இப்போதும் என் தலைவர், எனது நண்பர் அவரை நான் மதிக்கிறேன், அவரும் என்னை மதிக்கிறார் எனகோவையில் பா.சிதம்பரம் தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை நிறுவனரும் முன்னாள் மத்தியஅமைச்சருமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் எதிர்பார்த்தபடியே தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் இரு கட்சிகளும் ஸ்தம்பித்து நிற்கிறது. கருத்துவேறுபாடுகளால் அவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். நான் வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச விரும்பவில்லை. கடந்தபேரவைத் தேர்தலின்போது 3 தொகுதிகளில் மட்டும் ஆதரிப்பதாகச் சொன்னார்கள். அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.

ஆனால், இந்த முறை 30 தொகுதிகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொண்டதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. எந்த காரணத்திற்காகவும், நோக்கத்திற்காகவும் காங்கிரசை விட்டு வெளியே வந்தோமோ,அது நிறைவேறவில்லை. இதனால் மனக்கசப்பும், கருத்து வேறுபாடுகளும் தமாகாவில் ஏற்பட்டுள்ளது.

நான் இன்னொரு காங்கிரஸ் ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுவது வெறும் புரளி. மூப்பனார் இப்போதும் என்தலைவர், நண்பர். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மதிக்கிறோம்.

ஜெயலலிதாவின் மனு ஏற்கப்படாது என்பது பெரும்பாலானோர் கூறி வரும் கருத்தாக உள்ளது. இந்த நிலையில்அவர் தேர்தலில் போட்டியிடுவார். முதல்வர் ஆவார் என்பதெல்லாம் கற்பனை. நடிகர் ரஜினிகாந்த்தின்மானசீகமான ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+