கருணாநிதியின் பகல் கனவு பலிக்காது: ராமதாஸ்
தர்மபுரி:
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என கருணாநிதி பகல் கனவு காண்கிறார். அது பலிக்காது எனபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசினார்.
தர்மபுரி மாவட்டத்தில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர்ராமதாஸ் பேசியதாவது:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே நான் இந்தக்கூட்டணிக்கு வெற்றிக் கூட்டணி எனப் பெயர் வைத்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டு காலங்களில் தமிழக மக்கள் பட்ட துன்பங்களை விரல் விட்டுச் சொல்லி விட முடியாது. அதுஏராளம். தமிழ்நாட்டில் அதிமுக விற்கு அடுத்தபடியாக இரண்டாவது கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சிவளர்ந்துள்ளது.
திமுகவுக்கு 3வது இடம் தான். அதிமுக அணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அங்கீகாரம் பெற்றகட்சிகளாகும். ஆனால் திமுகவில் பா.ஜ.கவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் சாதிக் கட்சிகள். தமிழ்நாட்டிலேயேபெரிய மாவட்டமாக இருக்கும் தர்மபுரி மாவட்டம், மிகவும் பின்தங்கிய மாவட்டம்.
இங்கு ஜெயலலிதா வெற்றி பெறுவார். இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கிருஷ்ணகிரியைத் தலைமையாகக்கொண்டு தனி மாவட்டம் அமைப்பார்.
இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவார். தமிழக மக்களுக்காக நான் எனது உயிரை வேண்டுமனாலும்தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.
ஜெயலலிதாவின் மனு நிராகரிக்கப்படும் என கருணாநிதி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். கருணாநிதியின்கனவு பலிக்காது.
கருணாநிதியின் ஆட்சி காலத்தில் வர்த்தகம் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்து விட்டது. சிமெண்ட் விலைகடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட அதிமுகவை ஆதரியுங்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications