கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரிக்கு அடி- உதை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரிக்கு அடி- உதை விழுந்தது. சேர்கள் தூக்கிவீசப்பட்டன. அந்த அலுவலகமே சூறையாடப்பட்டது.
கிருஷ்ணகிரி ஆர்.டி. ஓ அலுவலகமே கலவரப் பகுதியாகக் காட்சியளித்தது.
இந்த முறை ஆட்சியைப் பிடித்து விடும் ஆர்வத்தில் இருந்த அதிமுகவிற்கு இந்த வேட்பு மனுக்கள் நிராகரிப்பு எதிர்பார்க்கப்பட்டஒன்று என்றபோதிலும், கட்சித் தொண்டர்களிடையே வேதனையையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் டான்சி நிலத்தை அரசு விதிமுறைகளை மீறி பெற்ற வழக்கில் இரண்டாண்டு சிறைத் தண்டனைவிதித்து ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து அவர் தேர்தலில் போட்டியிடமுடியுமா என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது.
உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான மனு விசாரணையில், அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து "தேர்தல் கமிஷன்முடிவெடுக்கும் என தீர்ப்பளித்தது.
தேர்தல் கமிஷனோ, அந்த தொகுதி தேர்தல் அதிகாரி தான் இது குறித்து முடிவு செய்வார் எனக் கூறிவிட்டது. இந் நிலையில்ஜெயலலிதா, நான்கு தொகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துதார்.
கிருஷ்ணகிரியில் முன்னதாக நடந்த மனு பரிசீலனையின்போது உச்ச நீதிமன்ற வக்கீலும் மேற்குக வங்க முன்னாள் முதல்வருமானசித்தார்த் சங்கர் ரே, தேர்தல் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பல ஆதாரங்களை எடுத்து வைத்தார்.
இதனை பரிசீலனை செய்தபிறகு தேர்தல் அதிகாரி ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்து மற்ற வேட்பாளர்களின்பெயர்களை வெளியிட்டார்.
இதையடுத்து உணர்ச்சிவசப்பட்ட அதிமுக தொண்டர்கள், அங்கிருந்த சேர் டேபிள்களைத் தூக்கி எறிந்தனர். இதனால் அங்குகலவரமாகக் காட்சியளித்து.
கிருஷ்ணகிரியில் பல பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications