வன்முறை பயம்: பிரச்சாரத்தை நிறுத்திய வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிப்பு குறித்த அச்சம் பரவியதையடுத்து கோவை பகுதியில் பிரச்சாரத்தில் கூட எந்தக்கட்சியினரும் ஈடுபடவில்லை.
செவ்வாய்க்கிழமை பகலில் பிரச்சாரத்தை திமுக உள்ளிட்ட ஆளும் கட்சி கூட்டணியினர் தவிர்த்துவிட்டனர்.
ஜெயலலிதாவின் வேட்பு மனு குறித்து எதிர்மறையான முடிவு வெளி வந்தால் தகராறு ஏற்படும் என்ற அச்சமே பிரச்சாரத்தைதவிர்க்கச் செய்துவிட்டது.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் தீர்ப்பு குறித்து தமிழகம் முழுவதுமே அரசியல் கட்சிகள் தவிர, பொது மக்களிடையேயும்பெரும் ஆர்வம் நிலவுகிறது.
கிருஷ்ணகிரித் தொகுதியில் ஜெயலலிதாவின் மனு பரிசீலனை செய்யப்படுவதைத் தொடர்ந்து அங்கு அதிரடிப்படையினர்மட்டுமல்லமாமல் தீயணைப்புப் படையினரும் கூட உஷார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications