4 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்விட்டன. இதனால் அவர் வரும்சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தெளிவாகிவிட்டது.

தனது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் கூட தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஜெயலலிதாதிட்டமிடுள்ளார்.

தனக்கு எதிராக சதி செய்து தனது வேட்பு மனுக்களை கருணாநிதி அரசு நிராகரிக்கச் செய்துவிட்டதாகக் கூறிஅனுதாப அலையை உருவாக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இதில் எந்த அளவுக்கு அவர் வெற்றி பெறுவார்என்று தெரியவில்லை.

தேர்தலில் நிற்காவிட்டாலும் கூட முதல்வர் பதவிக்கான போட்டியாளராகவே அவர் தொடர்ந்து தன்னை முன்நிறுத்துவார். முதல்வர் ஆன பின்னர் 6 மாதம கழித்து எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. ஆகலாம் என்றஅடிப்படையில் தன்னை முதல்வராக்குமாறு அவர் பிரச்சாரம் செய்வார் என்று தெரிகிறது.

அவருக்கு அனுதாப அலை எல்லாம் கிடைக்காது என முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் கமிஷனின் இந்த முடிவால் தங்களது கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என காங்கிரஸ்அறிவித்துள்ளது. அதிமுகவுடனான கூட்டணி தொடரும் எனவும் அக் கட்சி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+