தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடலாம் எனஅஞ்சப்படுவதால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ள ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகியநான்கு தொகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து ராயப்பேட்டைபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனைவிதிக்கப்பட்டதையடுத்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி வந்துவிட்டுத்திரும்பிக் கொண்டிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த பஸ்சுக்கும் அவர்கள் தீ வைத்தனர்.
இதில் 4 மாணவிகள் பஸ்சிலேயே எரிந்து சாம்பலாயினர். அது போன்ற சம்பவம் ஏதும் நடந்துவிடாமல் இருக்கதமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக போலீசார் தவிர, மத்திய ரிசர்வ் படை போலீசார், அதிரடிப் படையினரும் பாதுகாப்பில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் தீவிர ரோந்துப் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ளஅனைத்துத் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.அவர்களின் அலுவலகம், வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் திங்கள்கிழமை ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா அங்கிருந்து நாளைகோயம்புத்தூர் செல்வார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications