சேடப்பட்டி முத்தையாவின் வேட்பு மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் சபாநாயகர்சேடப்பட்டி முத்தையாவின் வேட்ப மனு நிராகரிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் மீது வருமானத்துக்கு அதிகமான வகையில்சொத்து சேர்த்து தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முத்தையா மற்றும் அவரது மனைவிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முத்தையாவுக்கு 25 மாதசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனிக் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சேடப்பட்டி முத்தையா ஜாமீன் கோரி மனு செய்தார். அதில் அவருக்குஜாமீன் மட்டும் வழங்கப்பட்டது. தண்டனை நிறுத்தி வைக்கப்படவில்லை.

இந் நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில் சேடப்பட்டி தொகுதியிலிருந்து போட்டியிட சேடப்பட்டி முத்தையாவும், அவரது மனைவியும்மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடந்தது.

சேடப்பட்டி முத்தையாவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்வதாகசேடப்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரி திருஞானசம்பந்தம் அறிவித்தார்.

2 ஆண்டுகளுக்கு குறைவாக சிறைத்தண்டனை பெற்றிருப்பதால் சேடப்பட்டி முத்தையாவின் மனைவியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+