ஜெயலலிதாவை நிராகரித்த ஜெயா!
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் பெயரும் ஜெயா தான்.
3 காரணங்களின் அடிப்படையில் மனுவை அதிகாரி எஸ். ஜெயா நிராகரித்தார்.
காரணங்கள் விவரம்:
1. இரண்டு ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜெயலலிதாவுக்கு 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2. தீர்ப்பை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பையும் நிறுத்திவைக்கவில்லை.
3. ஒருவர் 2 இடங்களுக்கு மேல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது. ஆனால், ஜெயலலிதா 4இடங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்தக் காரணங்களால் தான் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரிப்பதாக அதிகாரி ஜெயா அறிவித்தார்.












Click it and Unblock the Notifications