மீண்டும் துவங்கியது விடுதலைப் புலிகள்- ராணுவம் சண்டை
கொழும்பு:
விடுதலை புலிகள் வசம் உள்ள யானை இறவு பகுதியை மீட்பதற்காக இலங்கைராணுவம் அக்னி கிலா என்ற பெயரில் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி இலங்கையில் நிலவி வரும்இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் நல்லலெண்ணத்துடன் சண்டை நிறுத்தம்அறிவிப்பதாகவும், இதற்கு இலங்கை அரசும் ஒத்துழைத்து ராணுவ தாக்குதலை நிறுத்தவேண்டும் என கேட்டுக் கொண்டு புலிகள் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தினர்.
ஆனால் இலங்கைஅரசு இதை ஏற்கவில்லை. புலிகள் மீது தொடர்ந்து ராணுவதாக்குதலை நடத்தியது.
ஆனாலும் விடுதலைப் புலிகள் சண்டை நிறுத்தத்தை நீட்டித்து வந்தனர். இது நான்குமாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. இறுதியில் சண்டை நிறுத்தத்தை நேற்றுடன்(செவ்வாய்க்கிழமையுடன்) விடுதலைப் புலிகள் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
நான்கு மாதகாலமாக கடைபிடித்து வந்த சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவிடுதலை புலிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.
இதையடுத்து புலிகள் கடும் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்பட்டது.
ஆனால், முதல் தாக்குதலை இலங்கை அரசு தான் தொடங்கியுள்ளது. தற்போதுவிடுதலை புலிகள் வசம் உள்ள இருக்கும் யானை இறவு பகுதியை மீட்கும் முயற்சியாகஇலங்கை ராணுவம் அக்னி கிலா என்ற பெயரில் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணரத்னே கூறுகையில், இலங்கைராணுவம் இந்த தாக்குதலை எலுத்து மாடுவல் பகுதியிலிருந்து புகன்கிழமை காலை5.30 மணிக்கு ராணுவம் துவங்கியது.
இந்த தாக்குதல் விடுதலை புலிகள் வசம் இருக்கும் பலாலி மற்றும் யானை இறவுபகுதிகளை மீட்பதற்காக துவங்கப்பட்டது. ராணுவம் வெகுவாக முன்னேறி வருகிறதுஎன்றார்.
கடந்த ஆண்டு நடந்த ஏப்ரல் மாதம் சண்டையில் இலங்கையிடமிருந்து யானை இறவுபகுதியை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். யானை இறவு பகுதியை இழந்தாலும்இலங்கை ரணுவம் விடுதலைப் புலிகள் வசமிருந்த 70 சதவிகிதம் பகுதியைமீட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ராணுவ வீரர்களுக்கான வீர தீர செயல்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறுகையில், விடுதலைபுலிகள் மீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம்.
விடுதலை புலிகள் இயக்கம் எந்த விதமான கொள்கையும் இல்லாத தீவிரவாதஇயக்கம்.
அமைதி பேச்சுவார்த்தை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் சிலமாதங்களில் நிச்சயமாக நல்லதொரு முடிவை எடுக்க முடியும் என நம்பிக்கைஇருக்கிறது
விடுதலை புலிகள் கேட்பது போல் நாட்டை பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது.
விடுதலை புலிகள் இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குஇன்னமும் வாய்ப்பிருக்கிறது. அதற்கான கதவுகள் திறந்துதான் இருக்கிறது.
பாதுகாப்பு படையினருக்கு தற்போது சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு நவீன ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளது.
பல தடங்கல்களுக்கு இடையேயும் இலங்கை அரசு விடுதலை புலிகளுக்கு எதிராகராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ வீரர்களின் கடமை உணர்வு மிகவும்பாராட்டத்தக்கது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications