கருணாநிதி சதி செய்துவிட்டார்- ராமதாஸ் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

ஜெயலலிதாவை தேர்தலில் நிற்கவிடாமல் சதி செய்த கருணாநிதியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என பாட்டாளி மக்கள்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இங்கு கூடியுள்ள அனைவரும் வருத்தமான சூழ்நிலையில் உள்ளோம். ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிட விடாமல் சதிசெய்து விட்டார் கருணாநதி. இந்த செயலால் கருணாநிதி தோற்று விட்டதாகத் தான் அர்த்தம்.

மே 13ம் தேதி ஜெயலலிதா முதல்வராவது உறுதி. அவர் நீதிமன்றம் மூலமோ, மக்கள் தீர்ப்பு மூலமோ மீண்டும் முதல்வராகப் பதவிஏற்பார். தமிழகத்தல் 5 ஆண்டுகாலம் நல்லாட்சி நடக்கும். இதையே மக்களும் விரும்புகின்றனர்.

கருணாநிதிக்கு இது தான் கடைசித் தேர்தல். திமுக இதில் தோல்வியைத் தழுவும். இதுவே அந்தக் கட்சிக்கும் கடைசித் தேர்தலாகஅமையும் என்றார்.

சேலத்தில் பேச்சு:

முன்னதாக சேலத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் ராமதாஸ் கூறியதாவது:

அதிமுக கூட்டணி மகா, மெகா கூட்டணி, மிகப் பெரிய வெற்றியை இந்த தேர்தலில் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி மதச்சர்பற்ற கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு நான் வைத்திருக்கும் பெயர் வெற்றிக்கூட்டணி. ஆனால் கருணாநிதி தலைமையில் இருக்கும் கூட்டணி பூஜ்யக் கூட்டணி. அதிமுக கூட்டணியில், தேசியக் கட்சிகளானகாங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில் பாரதிய ஜனதாவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இடம் பெறவில்லை.

திமுக ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டம் ஏராளம். அவர்கள் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. எனவே புதிய ஆட்சியைஏற்படுத்த அவர்கள் துடிப்புடன் உள்ளனர். கைத்தறி, பஞ்சாலைத் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட பலர் கடந்த ஆட்சியில்பெரும் பாதிப்பிற்குள்ளாயினர்.

தமாகா, பாமக, மதிமுக ஆகியவை திமுக கூட்டணியிலிருந்து விலகக் காரணம் என்ன? திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சிஎன்பது தான் காரணம்.

மக்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர். புதிய ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+