ஜெயலலிதாவுக்கு அனுதாபம் கிடைக்காது- கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அனுதாப அலை எதுவும்ஏற்படாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
தன்னுடைய இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய கருணாநிதிநிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
சட்டப்படியான ஒரு நடவடிக்கையைத்தான் தேர்தல் அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதுஜனநாயகத் துரோகம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்
என்ற திருக்குறளுக்கேற்ப முறையாக எல்லாவற்றையும் செய்தாலும்கூட திறமைஇல்லாதவர்கள் கடைசியாக இப்படித்தான் நான்கு இடங்களில் வேட்பு மனுத்தாக்கல்செய்துவிட்டு கஷ்டப்படுவார்கள்.
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக நான்மகிழ்ச்சி அடையவில்லை.
இவ்வளவு படித்திருந்தும் விவரம் தெரியாமல் நான்கு இடங்களில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறாரே என்றுதான் கிராம மக்கள்கூட எண்ணுவார்களே தவிரஒரு அனுதாப அலையும் ஏற்படாது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications