வேட்பு மனு நிராகரிப்பு: கோபுரத்திலிருந்து குதிக்க முயன்ற வாலிபர்

Subscribe to Oneindia Tamil

காரமடை:

தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட தாக்கல் செய்த தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து 300 அடி உயர கோபுரத்தில் ஏறி தற்கொலைசெய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார் வாலிபர் ஒருவர்.

இதையடுத்து காரமடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட ரகமதுல்லா (27) என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இவர் தமிழக முஸ்லிம்முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார்.

கடந்த முறை வெளியான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் புதிதாக வெளியான வாக்காளர் பட்டியலில்அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து பிற்பகல் ஒன்றரை மணி அளவில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, காரமடையில் உள்ள தொலைபேசி நிலையக் கோபுரத்தின் மீதுசரசரவென ஏறினார். அங்கு உச்சியில் நின்று கொண்டு தான் கிழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.

அவர் கூறுவது எதுவும் சரியாக கேட்கவில்லை. ஊரே அந்தப் பகுதியில் கூடியது. அவர் கோபுர உச்சியிலிருப்பது பற்றி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி,ராஜாங்கம் தலைமையிலான தனிப்படை அவரை கீழே இறக்கும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால், கீழே இறங்க மறுத்தார் அவர்.

டி.எஸ். பி ராஜாங்கம் வேறு ஒரு கிரேன் ஒன்றை வரவழைத்து அதில் ஏறி மேலே சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணிநேரத்திற்குப் பிறகு ஒருவழியாக சமாதானம் அடைந்த ராகமதுல்லா இறங்கி வந்தார்.

போலீசார் அவரை கோழி அமுக்குவது போல அமுக்கி பிடித்துச் சென்றனர். அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து உள்ளே தள்ளினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+