மாணவி சரிகா கொலை வழக்கு: 9 பேருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை:
சென்னை கல்லூரி மாணவி சரிகா ஷா ஈவ் டீசிங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பிற்பகலில், சென்னை எத்திராஜ்கல்லூரி அருகே அக்கல்லூரியில் படித்து வந்த சரிகா ஷா என்ற மாணவியும் அவரதுதோழியும் அருகிலிருந்த கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஒரு ஆட்டோவில்,ஹரி, சரவணன், பன்னீர் செல்வம், ஸ்ரீதர், வினோத், இன்னொரு ஸ்ரீதர், பிரபுதாஸ்,புகழேந்தி, முருகன் ஆகிய 9 பேரும் அப்பகுதியில் வந்தனர்.
சரிகா ஷாவையும் அவரது தோழியையும் பார்த்த அவர்கள் ஆட்டோவைஅவர்களுக்கு பக்கத்தில் ஓட்டிச் சென்று கேலி செய்தனர். ஹரி என்பவர் சரிகா ஷா மீதுவிழுந்தார். சரிகா தரையில் சரிந்தார். சிலர் தண்ணீர் பாட்டிலால் தண்ணீரைபீய்ச்சியடித்து கிண்டல் செய்தனர்.
கீழே விழுந்த சரிகா ஷாவுக்கு தலையில் பலத்த அடிபட்டது. மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்ட அவர் கோமாவில் ஆழ்ந்தார். பின்னர் அதிலிருந்துமீளாமலேயே இறந்தார். தமிழகத்தைப் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவம்தொடர்பாக 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்புவியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பன் தனதுதீர்ப்பில், மிருகத்தனமாக சரிகா ஷா கட்டிப்பிடிக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டுள்ளார்.இதனால் அவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்துக்குக் காரணமான ஹரி உள்பட 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் தலா ரூ. 8000 அபராதம்விதிக்கப்படுகிறது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications