பாண்டிச்சேரியில் பா.ம.க வேட்பாளருக்கு அடி-உதை
சென்னை:
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரது கார் அடித்துநொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
பாண்டிச்சேரி காசுக்கடை சட்டசபைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக மலர் மன்னன் என்பவர்போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து (முன்னாள் அமைச்சர்கண்ணனின் கட்சி) விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தவர். மீனவர்களிடையே செல்வாக்கு மிக்கவர்.
காசுக்கடை தொகுதியில் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் லட்சுமி நாராயணன்போட்டியிடுகிறார். இருவரும் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு காசுக்கடை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மலர் மன்னன் ஓட்டு சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அங்கு வந்த பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையேதிடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பெரும் ரகளையாக மாறியது.
இதில் மலர் மன்னன் தாக்கப்பட்டார். அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது. படுகாயமடைந்த மலர் மன்னன்உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் சாலைமறியலில் இறங்கினர். சம்பவ இடத்தில் பெரும் கலவரச் சூழல் நலவியது. போலீஸார் விரைந்து வந்து பாதுகாப்பைபலப்படுத்தினர்.
பாண்டிச்சேரி பகுதியில் பிரசாத்தில் ஈடுபட்டிருந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் காசுக்கடைக்கு விரைந்துவந்தார். மலர் மன்னனை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திட்டமிட்டதாக்குதலில் மலர் மன்னன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். காசுக்கடை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினர்பதில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்றார்.
காசுக்கடை பகுதியில் தற்போது அமைதி நிலவி வந்தாலும் கூட பதற்றமான சூழ்நிலை உள்ளது. எனவே போலீஸார்அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications