தேர்தல் அதிகாரிகளை மிரட்டினார் கருணாநிதி: ஜெ. குற்றச்சாட்டு
மதுரை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்தவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு கருணாநிதிதான் காரணம் எனஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்,
ஊழல் வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் ஜெயலலிதாவின்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்குகருணாநிதிதான் காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பும்முன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதாகூறுகையில், கருணாநிதி தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதால்தான் என் வேட்புமனுக்கள் ஆண்டிப்பட்டியிலும், கிருஷ்ணகிரியிலும் நிராகரிக்கப்பட்டன.
கேரளத்தில் பாலகிருஷ்ண பிள்ளை ஊழல் செய்ததில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைபெற்றுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அங்கு ஜனநாயகம்பாதுகாக்கப்பட்டுள்ளது. இங்கு ஜனநாயகத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது.
நான் எனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவைக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்கப்போவதில்லை. தொடர்ந்துஅ.தி.மு.க.கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன்.
எனது வேட்புமனுக்கள் நிராகரிக்ப்பட்டபோதும், நான் கேட்டுக் கொண்டபடிஅ.தி.மு,க தொண்டர்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கோவை பிரச்சாரம்:
கோவை மாவட்டத்தில் வியாழன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:
மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வர சபதம் ஏற்றுள்ளேன்.உங்களுக்கு எனது வாழ்க்கையையே அர்ப்பணித்து விட்டேன். மக்கள் தான்எஜமானர்கள். மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் இறுதியானது.
கருணாநிதி, தனது மகன் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் எனக் கருதி, என்னைபழிவாங்க பொய் வழக்குப் பதிவுசெய்தார். அதில் இரண்டாண்டுகள் தண்டனை எனஅறிவித்து தேர்தலில் நிற்க விடாமல் செய்து விட்டார் என்றார்.
உடுமலை பிரச்சாரம்:
உடுமலையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, கருணாநிதி கடந்த 96ம்ஆண்டு முதல் தனது குடும்பத்திற்கு 1400 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார்.
கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தியே தீருவோம். இந்த தேர்தலுடன்கருணாநிதி ஆட்சிக்கு மக்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொன்னார். அத்தகையஇதயத்தை மக்களாகிய நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள். தீயசக்திகள் என்றும்வென்றதில்லை. எனக்கு நீங்கள்தான் நீதி வழங்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications