ஆழியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆழியாறு:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
ஆழியாறு அணைக் கட்டு பகுதியில், ரூ. 50 லட்சம் செலவில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந் நிலையில் வியாழக்கிழமைஇந்த கட்டட நிர்வாக அலுவலகத்திற்கு ஒரு மர்மபோன் வந்தது.
தமிழும் மலையாளமும் கலந்த ஒரு ஆண் குரல், இந்த அணைக் கட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது மாலை 3 மணிக்கு வெடிக்கும்எனக் கூறியது. 3 முறை இந்த மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டு எதுவும் உள்ளதா என சோதனை நடத்தினர். ஆனால், குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சோதனையின்போதுஅங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் போலீசார் வெளியேற்றினர்.












Click it and Unblock the Notifications