கடும் போர்: 300 ராணுவ வீரர்கள், 20 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் தொடர்ந்து நடந்துவரும் சண்டையில் இலங்கை தரப்பில் 1,200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20விடுதலைப் புலிகளும் இதில் பலியாயினர்.
விடுதலைப் புலிகள் கடந்த 4 மாத காலமாக அறிவித்திருந்த சண்டை நிறுத்தம்செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. அவர்கள் சண்டை நிறுத்தத்தை வாபஸ்பெற்றதையடுத்து இலங்கை ராணுவம் அக்னிகிலியா என்ற பெயரில் யாழ்பாணத்தைமீட்க தாக்குதலை புதன்கிழமை தொடங்கியது.
புலிகளில் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விடுதலைப் புலிகளின் வானொலிச் செய்தியில், ராணுவம் முன்னேறுவதைவிடுதலைப் புலிகள் தடுத்து வருகிறார்கள். இது வரை 300 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 1,200க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
புலிகள் தரப்பில் 20 வீரர்கள் மட்டுமே கொல்லபட்டுள்ளனர். புலிகள் சென்றுகொண்டிருந்த வாகனம் தாக்கப்பட்டதாக சொல்வதும் தவறு. சண்டை நடந்து வரும்பகுதியிலிருந்து 30 ராணுவ வீரர்களின் உடல்களையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம்எனத் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலையில் துவங்கிய தாக்குதல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஎன ராணுவ அதிகாரிகள் கூறினாலும், விடுதலைபுலிகள் சண்டை 3வது நாளாகதொடர்து நடந்து வருகிறதுஎன தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கருணரத்னே கூறுகையில், ராணுவம்கைப்பற்றிய எலத்துமடுவில் பகுதியை பாதுகாப்பதிலும், சண்டையில் காயமடைந்தவீரர்களை மீட்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
இரண்டு நாட்களாக நடந்த கடும் சண்டையில் ராணுவ தரப்பில் 110 வீரர்கள்கொல்லப்பட்டனர். 382 வீரர்கள் காயமடைந்தனர். 150 விடுதலைபுலிகள்கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. அந்தவாகனம் தாக்கப்பட்டதை புகைப்படமும் எடுத்துள்ளோம் என்றார்.
இந் நிலையில் சண்டையில் காயமடைந்த வீரர்கள் தொடர்ந்து விமானம் மூலம்மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சியில்மருத்துவர்கள் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்.
ஆனாலும் தேவையான அளவு ரத்தம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அரசுக்குசொந்தமான செய்தி தாளின் முதல் பக்கத்திலேயே மக்களை ரத்ததானம் செய்யுமாறுகேட்டு விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications