நான் ஒய்வு பெற வேண்டுமா? ராபின் சிங் கோபம்
மும்பை:
அடுத்த மாதம் ஜிம்பாப்வே செல்வதற்காக் தேர்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீர்ரகளின் முதல்பட்டியலில் தன் பெயர் இடம் பெறததால் கோபமடைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங்.
இதற்காக இந்திய கிரிக்கெட்தேர்வு குழுவினரை அவர் குறை கூறியுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர் ராபின்சிங். இவருக்கு 38 வயதாகிறது. தற்போதுவிளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில் இவர்தான் அதிக வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் மிகச் சிறப்பாக தொடர்ந்து விளையாடி வருபவர்.
அடுத்தமாதம் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முதல் பட்டியல்இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவால் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் 26 வீரர்களின்பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த 26 பேரிலிருந்து 12 பேர் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்திய தேர்வுக்குழு அறிவித்த முதல் பட்டியலில் ராபின்சிங்கின் பெயர் இடம் பெறவில்லை.ராபின்சிங்கிற்கு அதிக வயதாகிவிட்டதால் அவர் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்பட்டதால்ராபின் சிங் கோபமடைந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ராபின் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் பார்வையாளர்களின்கேள்விக்கும் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு வயதாகி விட்டது . நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என நினைத்தால் அதுதவறானது. 2003ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் உலக கோப்பை போட்டியில்விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. எனது உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்என்றார்.
ராபின்சிங் மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் டிரினிடாடில் கிரிக்கெட் விளையாட பயிற்சி பெற்றவர்.1989-90ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் திலீப் வெங்சர்காரின்தமைையிலான அணியில் முதல் முதலில் இந்தியாவிற்காக விளையாடினார்.
இவர் இதுவரை 136 ஒருநாள் சர்வதேச போட்டியிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications