எங்களுக்கு நேரம் சரியில்லை .. தாமரைக்கனி மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் எனது ஆதரவு மகனுக்கு அல்ல, கணவருக்குத்தான் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில்சுயேச்சையாகப் போட்டியிடும் தாமரைக்கனியின் மனைவி தேவகி கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் களம் வித்தியாசமான சூழ்நிலையில் உள்ளது. அப்பாவை எதிர்த்து மகன் மோதுகிறார்.அதிலும் சும்மா அப்பா கூட இல்லை, முரட்டு அப்பா. மகனும் அப்பாவைப் போலவே பிடிவாதப் போக்குடன்காணப்படுவதால், தேர்தல் களம் படு சூடாக உள்ளது.

தாமரைக்கனி சுயேச்யாைகப் போட்டியிடுகிறார். அவரது மகன் இன்பத்தமிழன் அ.தி.மு..க வேட்பாளராககளத்தில் நிற்கிறார். அரசியலில் இப்படி போட்டியிருக்க வீட்டில், எப்படி? தனது கணவருக்கே தேர்தலில் ஆதரவுஎன்று தாமரைக்கனியின் மனைவி தேவகி கூறியுள்ளார்.

தேவகி இதுகுறித்துக் கூறுகையில், நேரம் சரியில்லை அதான் எங்க குடும்பத்துல இப்படி நடக்குது. ஜெயலலிதாஎங்க குடும்பத்துல இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.

என் கணவர் எப்போதோ, ஏதோ ஒரு தப்பு செஞ்சார் என்ற காரணத்துக்காக எங்க குடும்பத்தை ஜெயலலிதா பழிவாங்கலாமா?

என் மகனும், கணவரும் அப்பாவிகள், வெகுளிகள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இப்போதுகோபத்தில் எதிரும், புதிருமாக நிற்கிறார்கள்.

சுயேச்சையாக நிற்க வேண்டாம் என்று அவரிடம் எவ்வளவோ கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.பிடிவாதமாக நிற்கப் போகிறேன் என்று கூறி விட்டார்.

எனது மகன் இப்போதுதான் இப்படி மாறி விட்டான். முன்பெல்லாம் எனது கணவருடன் ஒத்துப் போய்விடுவான்.அவர் போக முடியாத இடத்திற்கெல்லாம் என் மகனைத்தான் எனது கணவர் அனுப்புவார். எனது மகன்வளருகிறான் பார் என்று பெருமையாகக் கூறுவார். இப்போது இப்படிச் செய்து விட்டான்.

எனது மகனுக்கு தொகுதி கொடுத்தது சரி, வேறு ஏதாவது தொகுதி கொடுத்திருக்கலாம். வேண்டுமென்றேதான்எனது கணவரை எதிர்ப்பதற்காக இந்தத் தொகுதியைக் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா என்றார் தேவகி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+