எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்பேன்: ஜெ.சபதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
எம்.ஜி.ஆர் ஆட்சி அமைக்க சபதம் ஏற்றுள்ளேன். கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? எனஜெயலலிதா மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
கோவையில் பிரசார சுற்றுப் பயணம் செய்து வரும் ஜெயலலிதா, தனது பேச்சை ஆரம்பம் முதல் இறுதி வரைமாற்றவே இல்லை. அந்தந்தப் பகுதியில் உள்ள சிறு பிரச்னையை மட்டும் பேச்சில் சேர்த்துக் கொண்டார் என்றாலும்,முற்றிலும் புதிதாக எந்த பேச்சுமே இல்லை.
கோவை மாவட்ட எல்லையில் என்ன பேசினரோ, அதே பேச்சை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பேசினார்.
சில இடங்களில் பொதுமக்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க சபதம் ஏற்றுள்ளேன். இதற்கு தடையாகஉள்ள கருணாநிதி ஆட்சியை அகற்றுவீர்களா எனக் கேட்டு வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications