12 நாட்களாக உயிருக்கு போராடிய பூனை மீட்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
12 நாட்களாக கட்டிடத்தின் சன்ஷேடில் சிக்கி தவித்த பூனை ஒன்று தீயணைப்பு படையினரால் உயிருடன்மீட்கப்பட்டது.
பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியின் சன்ஷேடில் பூனை ஒன்று மாட்டிக் கொண்டது.
அது வெளியே வரமுடியாமல் தவித்து வந்தது. வெளியே வர வழி தெரியாமல் அது தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த ஒருவர் பூனை தொடர்ந்து கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டுதீயணைப்புப்படை வீரர்களிடம் தெரிவித்தார்.
அதன் பின்பு தீயணைப்புப் படை வீரர்கள் ஏணியுடன் அரசு மருத்துவமனைக்கு வந்து பூனையை மீட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications