ஜெ.முதல்வராக முடியுமா? சட்டவல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசனை
சென்னை:
ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வெற்றி பெற்றால்ஜெயலலிதா முதல்வராக முடியுமா? அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியுமா? என்பது குறித்து தமிழககவர்னர் பாத்திமா பீவி, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணி பெரும்பான்மை பெற்றால் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கமுடியுமா? என்ற சர்ச்சை இந்தியா முழுவதும் எழுந்துள்ளது.
இந்நிலையில், அதிமுக அருதிப்பெரும்பான்மை பெற்றால் ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கமுடியுமா என்பது குறித்து கவர்னர் பாத்திமா பீவி, சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளார்.
பாத்திமா பீவியும், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அதனால் அவருக்கும் சட்டம் நன்றாகத் தெரியும்.தற்போது ஊட்டியில் உள்ள பாத்திமா பீவி டெல்லியில் உள்ள சொலிசிட்டர் ஜெனரல் சொரப்ஜியிடம் தொலைபேசிமூலம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அதே போல் டெல்லியிலுள்ள பிரபல வக்கீல்களான நாரிமன் மற்றும் ஹரீஷ் சால்வே ஆகியோருடனும்ஆலோசனை செய்துள்ளார்.
ஊட்டியிலிருந்து மே மாதம் 7 ம் தேதி சென்னை திரும்பும் கவர்னர் தொடர்ந்து நான்கு நாட்கள்சட்டவல்லுநர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்துகிறார். அதற்குப்பிறகு கவர்னர் பாத்திமா பீவி தனது இறுதிமுடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications