இலங்கையில் 3வது நாளாக தொடர்ந்து கடும் சண்டை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 3வது நாளாக தொடர்ந்து கடும் சண்டைநடந்து வருகிறது.

விடுதலைப்புலிகள் நான்கு மாத சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற பின் இலங்கை அரசு புதன்கிழமை புலிகள் மீதுகடும் தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பினருக்கும்இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், 3 நாள் சண்டையில் 300 பேர்கொல்லப்பட்டனர் என்றார்.

அதிகார பூர்வமான அரசு செய்த்திக்குறிப்பில், 127 ராணு வீரர்கள் கொல்லப்பட்டனர். 200 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். இரு தரப்பிலும் சேர்ந்து 1,300 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விடுதலைப்புலிகள் கூறுகையில் 300 இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றனர்.இந்நிலையில் காயமடைந்த ராணுவ வீரர்களும் சிகிச்சைக்காக பலர் மருத்துவமனைகளிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் மருத்துவமனைகளில் தேவையான ரத்தம் சேமிப்பில் இல்லாததால் ரத்ததானம் செய்யுமாறு மக்களுக்குஅதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+