முரசொலி மாறன் மீதான புகார் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கைசெஷன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் முரசொலி மாறன். இவர் தமிழக முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதியின் நெருங்கிய உறவினர்.

இவரும், இவர் குடும்பத்தினரும் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1,500 கோடி சொத்து சேர்த்ததாக இன்பதுரைஎன்பவர் சில தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து மத்திய ஊழல் தடுப்பு போலீசார்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் இன்பதுரை கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த புகார் மனு செஷன்சு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த புகாருக்கு எந்த விதமான ஆதராமும்இல்லை என கூறி இந்த மனுவை முதன்மை செஷன்சு நீதிபதி அசோக்குமார் தள்ளுபடி செய்தார்.

அவர் தனது தீர்ப்பில் கூறுகையில், மத்திய அமைச்சர் முரசொலி மாறனும், அவரது உறவினரும் வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்த்ததாக மனுதாரர் புகார் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கான எந்த விதமான ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. மனுதாரர் 10 ஆண்டுகாலமாகவழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஆனால் யூகத்தின் அடிப்படையில் புகார் செய்து நீதிமன்றத்தைதபால்நிலையம் போல் உபயோகப்படுத்த முயற்சிக்கிறார்.

சுயநலம் மற்றும் விளம்பரத்திற்காக அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் கூறிய எந்த புகாரையும் அவரால்நிரூபிக்க முடியவில்லை.

தேர்தல் வரவிருக்கும் சமயத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிவிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் ஆதாரமற்றகுற்றச்சாட்டை சுமத்தி சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது.

இந்த புகார் மனு செண்பகமூர்த்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு, பின்னர் இன்பதுரை என்ற பெயரில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞராக இருக்கும் இன்பதுரை மீது இந்திய தண்டனை சட்டம் 211ம் பிரிவின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படலாம். ஆனால் அவர் எச்சரித்து மன்னிக்கப்படுகிறார்.

விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+