ஜெ. மனு தள்ளுபடியில் குழப்பம் இல்லை என்கிறது திமுக
சென்னை:
ஜெயலலிதாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதையும் கேரள மந்திரி பாலகிருஷ்ணன் பிள்ளையின் மனுஏற்கப்பட்டிருப்பதையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடியாது என்பது நன்கு தெரிந்தும் ஜெயலலிதா நான்குதொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
எப்படியாவது ஒரு தொகுதியிலாவது தன்னுடைய வேட்புமனு ஏற்கப்படாதா என்ற ஆசையில் அவர் இவ்வாறுசெய்திருக்கிறார்.
திமுகதான் சதி செய்து தன்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் செய்துவிட்டது என்று அழுது புலம்பி அவர் மக்களையும்நன்றாகக் குழப்பி விட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ள ஒரு அரசியல்வாதியின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதுமட்டுமன்றி, அவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்றுதான் சட்டம் கூறுகிறது.
ஆனால் கேரள மந்திரியின் நிலை வேறு. அவர் இப்போது பதவியில் இருக்கிறார். அவர் எளிதாக மேல்முறையீடுசெய்வதற்கான விதிமுறைகள் சட்டத்தில் உண்டு. அதனால்தான் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை.
முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனரும், தற்போதைய கர்நாடக கவர்னருமான ரமாதேவி எழுதிய ஒருபுத்தகத்தில்கூட, ஒரு வேட்பாளர் இரண்டுக்கு மேற்பட்ட தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தால், அவருடையஅனைத்து மனுக்களும் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட வேறுஎன்ன வேண்டும் என்றார் பொன்.முத்துராமலிங்கம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications