யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: சுவாமி ஆருடம்
சேலம்:
சட்டசபைத் தேர்தல்முடிவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. முடிவு வந்தவுடன் 3வது அணிஅமைப்பேன் என சுப்ரமணியசாமி ஆருடம் கூறியுள்ளார்.
சேலத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே, இந்த தேர்தலின் முடிவுக்குபிறகு நான் 3வது அணி அமைக்கப் போகிறேன். இந்த 3வது அணிதான் யார் ஆட்சி அமைக்க வேண்டும்என்பதைத் தீர்மானிக்கும்.
கேரளாவில் பாலகிருஷ்ணனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதில் நியாயம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில்ஜெயலலிதா நான்கு மனுக்களைத் தாக்கல் செய்ததற்கே 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.
டான்சி வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க ஜெயலலிதா தடை உத்தரவு பெற்றிருந்தார். ஆனால், பின்னர்தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. எனவே,தடையுத்தரவும் ரத்தானதாகத் தான் அர்த்தம். எனவே, அவர் இப்போது ஜெயிலுக்குள் தான் இருக்க வேண்டும்.
ஆண்டிபட்டியில் ஜெ. வேட்பு மனுவை தள்ளுபடி செய்த அதிகாரியை மிரட்டியுள்ளனர். அவர் மீது வழக்கத்தொடரப் போவதாகவும் கூறினார். வழக்கு ஏன் தொடரவில்லை?
திமுக ஆட்சியில் கல்வியில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழகம், 5 வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.ஜனதாக் கட்சியின் வளர்ச்சியை திமுக நசுக்க நினைக்கிறது. ஜெயலலிதாவை எதிர்த்து பிரசாரம் செய்யும் சிதம்பரம்,ஏன் ஒரு பொது நல வழக்கு கூட அவர் மீது தொடரவில்லை என்றார் சுப்ரமணியசுவாமி.












Click it and Unblock the Notifications