தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியை வாழ்த்திய வைகோ

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வைகோ, முதல்வர் கருணாநிதி 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.

திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்குமார் கைகூப்பியபடியே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ, அவரை அழைத்து உட்காரச் செய்து விட்டு "இப்படிக்கும்பிட்டுக் கொண்டே இருந்தால் மட்டும் மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டுவிட மாட்டார்கள். வந்து,வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, உட்கார்ந்துவிட வேண்டும்" என்றார் வைகோ.

பின்னர் அவர் பொதுமக்களிடம் பேசுகையில், "மதிமுகவுக்காக வாக்குக் கேட்பது எங்கள் கடமை. ஆனால்உங்களுக்குப் பிடித்த கட்சிக்கே நீங்கள் ஓட்டுப் போடுங்கள். ஆனால் ஓட்டுப் போடாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்<.>

முதல்வர் கருணாநிதி பற்றிப் பேசும்போது எப்போதும் "அண்ணன் கலைஞர்" என்றே குறிப்பிட்டார் வைகோ.

"அண்ணன் கலைஞர் நல்ல உடல் நலத்துடன் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்" என்று கருணாநிதியை வாழ்த்தினார்.

அதிமுகவைப் பற்றிய விமரிசனங்களைப் பெரிதும் தவிர்த்த வைகோ, திமுக தொண்டர்களைப் பற்றிப்பேசும்போது, அவர்களுடன் உள்ள பாச உணர்வை வலியுறுத்தும் வகையில் அவருடைய பேச்சு உணர்ச்சிகரமாகஇருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+